Tuesday, November 29, 2016
Friday, October 7, 2016
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெறவேண்டும்.
நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற.....ஏழைகளின் வாழ்வு முன்னேற....பெண்களின்
முன்னேற்றத்திற்கு வழிவகுக்க....ஆணாதிக்கம் ஒழிய....காவிரியிலிருந்து நீரை பெற....
தமிழ்நாடு வளம்பெற....
Tuesday, October 4, 2016
சுவாதி கொலையும்...!!!! ராம்குமார் படுகொலையும்....???? - ஆதங்கத்துடன் வள்ளிநாயகம் சுட்கி
#சுவாதி_கொலையும்
#ராம்குமார்_படுகொலையும் - ஆதங்கத்துடன் வள்ளிநாயகம் சுட்கி
ராம்குமார தான் கொன்னுட்டாங்களே இன்னும் நீ ஏன்டா அவனுக்கு முட்டு கொடுக்குறனு என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்டாங்க. ராம்குமார்க்காக கடைசியா இந்த ஒரு பதிவையும் பொறுத்துக்கோங்க, ஏன்னா அவன இன்னிக்கு மண்ணுல புதைத்தாகிவிட்டது. இது என்னோட ஆதங்கம் தான். படிச்சிட்டு பரிதாபப்படுறதும், கோவபடுறதும், சிரிச்சிட்டு போறதும் உங்களோட விருப்பத்துக்கே விடுறேன்.
சில நண்பர்கள் ராம்குமார் உங்க சாதியானு நேரடியாவே கேட்டாங்க
சில நண்பர்கள் ராம்குமார் என்ன தியாகியானு பல பதிவு மூலமா கேட்டாங்க
சில நண்பர்கள் செஞ்ச பாவத்துக்கு அவனுக்கு இது தேவைதான்னு சொன்னாங்க
சிலர் ராம்குமாருக்காக நான் போட்ட பதிவ பார்த்து என்ன அன்பிரெண்ட் பண்ணிட்டு போனாங்க
சிலர் கமெண்ட்ல கெட்ட வார்த்தை கூட பதிவு செஞ்சாங்க
சிலர் உங்க வீட்ல இதே போல பொண்ண வெட்டி கொன்னா நீ இப்படி பதிவு போடுவியானு கேட்டாங்க
முகநூல பொறுத்தவரை இங்க எல்லோருக்கும் ஒருநாளைக்கு ஒரு டாப்பிக் கிடைச்சா போதும், ஆனா நான் ஏன் இன்னும் இந்த ராம்குமார புடிச்சி தொங்கிட்டு இருக்கேன்னு எனக்கும் தெரியும் என்ன சுத்தி இருக்கிற நண்பர்களுக்கும் தெரியும் அவன் ஒரு பலிகடானு.
அதுக்கு முன்னால முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கோங்க நண்பர்களே, என்னை இந்த சாதி வட்டத்துல அடைச்சிடாதீங்கப்பா. ராம்குமார் எந்த ஜாதினு தெரியுறதுக்கு முன்னாடியே நான் ராம்குமாருக்கு ஆதரவாகத்தான் பதிவு போட்டேன். அதுவும் ஒரு சராசரி வழக்கறிஞராக தான். அப்புறம் ராம்குமார் இந்த ஜாதினு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் ராம்குமாருக்கு ஆதரவாகத்தான் பதிவு போடுறேன், ஏன்னா பேஸ்புக்குல உங்கல போல அவன் நம்ம ஜாதியில்ல இனி அவனுக்கு எதிரா தான் பதிவு போடனும்னு நவ துவாரத்தையும் மூடிட்டு போற ஆளு நான் இல்ல. இந்த வழக்குல இது என்னோட சந்தேகம் மட்டுமில்லாம நிறைய பேரோட சந்தேகமா இருக்கு.
என்னை ஒரு சராசரி மனுசனா பாருங்க., இத விட நீங்க எனக்கு பண்ற உதவி வேற எதுமே இல்ல, ஏன்னா இதே போல வேற எந்த சாதிக்காரன ஜெயில்ல வச்சி கொன்னாலும் நான் கேட்பேன் ஒரு வழக்கறிஞராக, அத நல்லா புரிஞ்சிக்கோங்க..
முதல்ல எல்லோரும் ஒன்னு தெரிஞ்சிக்கோங்க. ராம்குமார் குற்றவாளி இல்லனு நிரூபிக்க ஆயிரம் காரணம் இருக்கு, ஆனா அவன் மட்டும் தான் குற்றவாளினு கைது பண்ண போலீசாரால கூட நிரூபிக்க முடியல, அதனால தான் அவன் சோலிய முடிச்சாங்க.
அவன கொல பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் அவன் ஜாமீன்ல வெளிய வந்திருப்பான்.(ஏன்னா ஒரு கொலை வழக்கில் அதிகபட்சம் 90 நாள்ல ஜாமீன் வழங்கப்படும்) அதனால தான் அவன் சோலிய முடிச்சாங்க.
ஒருவேளை அவன் வெளிய வந்ததும் நான் கொல பண்ணலனு சொன்னா தமிழ்நாடு அரசு மேலயும், இந்த காவல்துறை மேலயும் பொதுமக்கள் காரி உமிழ்வாங்கனு தெரியாதாயா.. அதான் சோலிய முடிச்சாங்க.
சரி நான் தான் செஞ்சேன், என்ன இவருதான் செய்ய சொன்னாருனு சொன்னால், அவனை கைது செய்த போலீஸ் முதல் நாள் சொன்னாரே அதாவது "ராம்குமார் மட்டும் தான் குற்றவாளினு" இப்போ அவர் வேலைய ராஜினாமா பண்ண வேண்டியது இருக்கும்னுதான் ஜெயிலுக்குள்ள சோலிய முடிச்சிட்டாங்க.
சரி நான் மட்டும் தான் செஞ்சேன் அப்புடினு சொன்னாலும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ண முடியலனு நாடே கேக்கும், அதனால தான் சோலிய முடிச்சாங்க.
அவன கைது பண்ண உடனே போலீஸ் என்ன சொன்னாங்க தெரியுமா? ஒரே வாரத்தில இவன் மேல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்னு சொன்னாங்க. ஆனா 80 நாள் ஆச்சி குற்றப்பத்திரிகைக்கு பிள்ளையார் சுழி கூட போடல, ஏன்னா போட முடியாது. அதனால தான்யா அவன சோலிய முடிச்சாங்க.
உண்மைக்குமே காவல்துறைக்கு
குற்றவாளி யாருனு தெரியும், ஆனா காவல்துறையோட அதிகாரம் மேலதிகாரி சொல்ற வரை தான், "Obey the order" அதாவது எவனையாவது புடி, கேச முடி. அதான் அவன் சோலிய முடிச்சிட்டாங்க.
எத்தனையோ வழக்குல குற்றவாளிய பாதுகாப்பா வச்சிருக்குற பொறுப்பு நீதிமன்றத்துக்கு இருக்கு, அதும் நீதிமன்றத்தால் ஆணையிட்டு இவனுக்கு சிறப்பான பாதுகாப்பு கொடுக்கனும்னு சொன்னதுக்கு அப்புறம் ஒருத்தன் கரெண்ட்டு கம்பிய வாயில கொடுத்து உடம்புலயும் சுத்திகிட்டு அதும் ஜாமீன் கிடைக்குற நேரம் பார்த்து தற்கொலை பண்ணிகிட்டானு சொன்னா நாம நம்பிட்டு நம்ம வேலைய பாக்க போயிடுறோம், ஏன்னா அவன் நம்ம சாதிக்காரன் இல்ல.
ஒரு குற்றவாளி சிறைச்சாலையில பாதுகாப்பா இருக்கும் போது சாகுறான்னு அதுக்கு நாம அரசாங்கத்த தான்யா திட்டனும், அவங்க மேல தான் கோவபடனும், இதுக்கும் ராம்குமார் மேலயே கோவபடுறானுங்க, ஏன்னா அவன் நம்ம சாதியில்ல
ராம்குமார கடைசி வரை மீடியா முன்னாலயும் பொதுமக்கள் முன்னாலயும் காட்டாத போதே தெரியவில்லையா இதில் நிறைய பேரு சம்பந்தப்பட்றுக்காங்கனு, அதுல நீங்க ஒருத்தன கூட இந்த வழக்குல சேர்க்கலியே, இதுகூட தெரியாம தான்யா நாம இவன் சாகவேண்டியவன் தான்னு சொல்லிட்டு இருக்கோம்.
ஆலடி அருணா கொலை வழக்கு, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, கோகுல்ராஜ் கொலை வழக்கு, தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு இப்படி எந்த வழக்குகளிலும் குற்றவாளி தற்கொலை பண்ணிக்கலியே, இல்ல கொல்லப்படலியே, இல்ல கொல்ல தான் இந்த மக்கள் விடுவாங்களா?
ஒரு வழக்கில் உண்மையான குற்றவாளிய கண்டுபிடிக்குறது ஒன்னும் நம்ம காவல்துறைக்கு பெரிய வேலை கிடையாது. ஆனா அவன் தான் குற்றவாளினு நிரூபிக்க தான் மேலிடத்து ஆணை வேனும். அப்படி ஏதும் பின்புலம் ஒன்னுமில்லாத ஆடு சிக்கிடுச்சினா முன்னாலெல்லாம் கேசுல தூக்கி உள்ள போடுவாங்க, இப்ப கொஞ்சம் முன்னேறி அதாவது அப்டேட் ஆகி சோலியவே முடிச்சிடுறாங்க, ரொம்ப பெருமையா இருக்குல.
அதேபோல ஒரு வழக்குல உண்மை தன்மைய தான் வெளிய கொண்டு வரனுமே தவிர, பொய்ய உண்மையாக்கி அத யாருக்குக்கும் தெரியாமயே மூடி மறைத்து கடைசியில ஆளையும் போட்டு தள்ள கூடாது.
ராம்குமார் இறந்ததுக்கு அப்புறம் கூட இரண்டு நீதிபதிகள் முன்னால போஸ்மார்ட்டம் செய்யனும்னு சொன்னதுக்கு அப்புறம் கூட, அந்த இரண்டு நீதிபதிகளுக்கு கருத்துவேறுபாடு வருதே அப்பவே தெரியலயா இந்த பயல சோலிய முடிச்சிட்டாங்கனு.
ராம்குமார் இறந்து கிட்டதட்ட ரெண்டு வாரம் கழிச்சி தான் போஸ்மார்ட்டம் நடக்கு, இதே நீதித்துறை தான் கபாலி படத்துக்கு டிக்கெட் பிரச்சனையில மறுநாளே தீர்ப்பு சொல்லுச்சி, இதுக்கு அப்புறமும் நாம ராம்குமார திட்டுவோம், ஏன்னா அவன் நம்ம சாதியில்ல.
சுடுகாட்டுக்கு நான் ஏன்டா பனிரெண்டு மணிக்கு போகனும் அப்டிங்குற மாதிரி தான், ராம்குமார் ஜெயில்ல ஏன்டா Dispensary blockக்கு போகனும் அதுவும் உயர் ரக பாதுகாப்போட இருக்குறவன்?
ராம்குமார் தான் குற்றவாளினு ஆதாரத்தோட நிரூபிச்சிட்டு அவன சுட்டு கொன்னா கூட நாப்பது பேரு கரெக்டுனு சொல்லுவாங்க, நாலு பேரு தப்புனு தானேயா சொல்லுவாங்க, நீங்க அத எதையுமே பண்ணாம இப்படி பொட்டணம் போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டீங்களே பாவிகளா.. அதும் உங்க அரசியலுக்கு யாரையோ காப்பாத்த இவன சோலிய முடிச்சிட்டீங்களே.
ராம்குமார் மட்டுமில்ல இன்னும் ஆயிரம் குற்றவாளிகள் ஏன் ஜெயிலுக்கு உள்ள இருக்கோம்னு தெரியாமையே வாழ்க்கையையும், இளமையினையும் தொலைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? ஏன்னா அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம்.
ஸ்வாதிக்கு ஒரு குடும்பம் இருக்குனு கஷ்டப்பட்ட நம்மால, ராம்குமாருக்கும் ஒரு குடும்பம் இருக்குனு நினைக்க முடியல, ஏன்னா அவன் நம்ம சாதியில்ல.
பெங்களூர்காரன் கூட அந்த பெரியவர அடிச்சிட்டு விட்டுட்டான்டா, ஆனா நாம தான் இவன்தான் குற்றவாளினு நிரூபிக்க முடியாம சோலிய முடிக்கிறோம். ஏன்னா ராம்குமார் நம்ம சாதியில்ல..
ஒருத்தன் #மகிழ்ச்சி னு சொன்னதுக்கே போட்டு பொரட்டி எடுத்தது நாம தான நண்பர்களே, அப்புறம் எப்புடி ராம்குமார் பக்கம் நியாயம் இருந்தா பேசுவோமா?
ராம்குமார் என்ன பெரிய தியாகியானு பேசுறுவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன், அடேங்கப்பா அவன் தியாகியெல்லாம் இல்லப்பா சாதாரன மனுசன் தான்டா, அதனால தான் அவன சோலிய முடிச்சிட்டீங்க.
கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
"ஒரு கொலை எப்போது (ஏழை)சாதி பாக்கப்படுதோ அப்பவே உண்மைய மறைக்க ஆயிரம் வழி அரசாங்கத்தால் உருவாக்கப்படும் என்பது அவரவர் சாதியில் ஒருவர் கொலை செய்யப்படும் போது கண்டிப்பாக தெரியும்"
ஆதங்கத்துடன்..
-வள்ளிநாயகம் சுட்கி
தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் செயல்பாடுகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள்
மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத்
திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர்
வழங்கல்,சிறப்புத் திட்ட செயலாக்கம்.
துறை சுயவிபரம்
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும்
மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே
அமைந்துள்ளன.
கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும். தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு
அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும்
வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும்
சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை
நோக்கமாகும்.
வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குதல்
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. இந்த அரசின்
தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத் தரமான வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை
நிர்ணயம் செய்யும்.
ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில்
தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி 51.55 விழுக்காடு, அதாவது 3.72 கோடி மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். மாநில மக்கள் தொகையில்
பெரும்பான்மையினர் ஊரகப் பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களின் நலத்தை
பேணுகின்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாலும் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல், வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை
ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக
வளர்ச்சியின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளாக கொண்டு செயல்படுகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான பங்கேற்போடு வளர்ச்சித் திட்டங்களை
சிறந்த முறையில் நிறைவேற்றுதன் மூலம் இத்தகைய குறிக்கோள்கள் எட்டப்படும்.
பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும்
உள்ளாட்சி நிர்வாகத்தின் நோக்கங்களை எய்திடும் வகையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள்
தங்கள் கடமைகளை திறம்பட நிறைவேற்றிட வழி வகை செய்தல் ஆகிய பொறுப்பு ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சித்துறையை சார்ந்தாகும்.
குக்கிராம அளவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சுகாதாரத்தினை மேம்படுத்தி, இயற்கை வளங்களைக்
காத்து, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும்
உள்ள இடைவெளியைக் குறைத்து, வறுமையை அகற்றி வளமான தமிழகத்தை உருவாக்க இந்த அரசு உறுதி
பூண்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)



