Tuesday, October 4, 2016

சுவாதி கொலையும்...!!!! ராம்குமார் படுகொலையும்....???? - ஆதங்கத்துடன் வள்ளிநாயகம் சுட்கி




#சுவாதி_கொலையும் 
#ராம்குமார்_படுகொலையும் - ஆதங்கத்துடன் வள்ளிநாயகம் சுட்கி


ராம்குமார தான் கொன்னுட்டாங்களே இன்னும் நீ ஏன்டா அவனுக்கு முட்டு கொடுக்குறனு என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்டாங்க. ராம்குமார்க்காக கடைசியா இந்த ஒரு பதிவையும் பொறுத்துக்கோங்க, ஏன்னா அவன இன்னிக்கு மண்ணுல புதைத்தாகிவிட்டது. இது என்னோட ஆதங்கம் தான். படிச்சிட்டு பரிதாபப்படுறதும், கோவபடுறதும், சிரிச்சிட்டு போறதும் உங்களோட விருப்பத்துக்கே விடுறேன்.
சில நண்பர்கள் ராம்குமார் உங்க சாதியானு நேரடியாவே கேட்டாங்க
சில நண்பர்கள் ராம்குமார் என்ன தியாகியானு பல பதிவு மூலமா கேட்டாங்க
சில நண்பர்கள் செஞ்ச பாவத்துக்கு அவனுக்கு இது தேவைதான்னு சொன்னாங்க
சிலர் ராம்குமாருக்காக நான் போட்ட பதிவ பார்த்து என்ன அன்பிரெண்ட் பண்ணிட்டு போனாங்க
சிலர் கமெண்ட்ல கெட்ட வார்த்தை கூட பதிவு செஞ்சாங்க
சிலர் உங்க வீட்ல இதே போல பொண்ண வெட்டி கொன்னா நீ இப்படி பதிவு போடுவியானு கேட்டாங்க
முகநூல பொறுத்தவரை இங்க எல்லோருக்கும் ஒருநாளைக்கு ஒரு டாப்பிக் கிடைச்சா போதும், ஆனா நான் ஏன் இன்னும் இந்த ராம்குமார புடிச்சி தொங்கிட்டு இருக்கேன்னு எனக்கும் தெரியும் என்ன சுத்தி இருக்கிற நண்பர்களுக்கும் தெரியும் அவன் ஒரு பலிகடானு.
அதுக்கு முன்னால முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கோங்க நண்பர்களே, என்னை இந்த சாதி வட்டத்துல அடைச்சிடாதீங்கப்பா. ராம்குமார் எந்த ஜாதினு தெரியுறதுக்கு முன்னாடியே நான் ராம்குமாருக்கு ஆதரவாகத்தான் பதிவு போட்டேன். அதுவும் ஒரு சராசரி வழக்கறிஞராக தான். அப்புறம் ராம்குமார் இந்த ஜாதினு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் ராம்குமாருக்கு ஆதரவாகத்தான் பதிவு போடுறேன், ஏன்னா பேஸ்புக்குல உங்கல போல அவன் நம்ம ஜாதியில்ல இனி அவனுக்கு எதிரா தான் பதிவு போடனும்னு நவ துவாரத்தையும் மூடிட்டு போற ஆளு நான் இல்ல. இந்த வழக்குல இது என்னோட சந்தேகம் மட்டுமில்லாம நிறைய பேரோட சந்தேகமா இருக்கு.
என்னை ஒரு சராசரி மனுசனா பாருங்க., இத விட நீங்க எனக்கு பண்ற உதவி வேற எதுமே இல்ல, ஏன்னா இதே போல வேற எந்த சாதிக்காரன ஜெயில்ல வச்சி கொன்னாலும் நான் கேட்பேன் ஒரு வழக்கறிஞராக, அத நல்லா புரிஞ்சிக்கோங்க..
முதல்ல எல்லோரும் ஒன்னு தெரிஞ்சிக்கோங்க. ராம்குமார் குற்றவாளி இல்லனு நிரூபிக்க ஆயிரம் காரணம் இருக்கு, ஆனா அவன் மட்டும் தான் குற்றவாளினு கைது பண்ண போலீசாரால கூட நிரூபிக்க முடியல, அதனால தான் அவன் சோலிய முடிச்சாங்க.
அவன கொல பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் அவன் ஜாமீன்ல வெளிய வந்திருப்பான்.(ஏன்னா ஒரு கொலை வழக்கில் அதிகபட்சம் 90 நாள்ல ஜாமீன் வழங்கப்படும்) அதனால தான் அவன் சோலிய முடிச்சாங்க.
ஒருவேளை அவன் வெளிய வந்ததும் நான் கொல பண்ணலனு சொன்னா தமிழ்நாடு அரசு மேலயும், இந்த காவல்துறை மேலயும் பொதுமக்கள் காரி உமிழ்வாங்கனு தெரியாதாயா.. அதான் சோலிய முடிச்சாங்க.
சரி நான் தான் செஞ்சேன், என்ன இவருதான் செய்ய சொன்னாருனு சொன்னால், அவனை கைது செய்த போலீஸ் முதல் நாள் சொன்னாரே அதாவது "ராம்குமார் மட்டும் தான் குற்றவாளினு" இப்போ அவர் வேலைய ராஜினாமா பண்ண வேண்டியது இருக்கும்னுதான் ஜெயிலுக்குள்ள சோலிய முடிச்சிட்டாங்க.
சரி நான் மட்டும் தான் செஞ்சேன் அப்புடினு சொன்னாலும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ண முடியலனு நாடே கேக்கும், அதனால தான் சோலிய முடிச்சாங்க.
அவன கைது பண்ண உடனே போலீஸ் என்ன சொன்னாங்க தெரியுமா? ஒரே வாரத்தில இவன் மேல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்னு சொன்னாங்க. ஆனா 80 நாள் ஆச்சி குற்றப்பத்திரிகைக்கு பிள்ளையார் சுழி கூட போடல, ஏன்னா போட முடியாது. அதனால தான்யா அவன சோலிய முடிச்சாங்க.
உண்மைக்குமே காவல்துறைக்கு
குற்றவாளி யாருனு தெரியும், ஆனா காவல்துறையோட அதிகாரம் மேலதிகாரி சொல்ற வரை தான், "Obey the order" அதாவது எவனையாவது புடி, கேச முடி. அதான் அவன் சோலிய முடிச்சிட்டாங்க.
எத்தனையோ வழக்குல குற்றவாளிய பாதுகாப்பா வச்சிருக்குற பொறுப்பு நீதிமன்றத்துக்கு இருக்கு, அதும் நீதிமன்றத்தால் ஆணையிட்டு இவனுக்கு சிறப்பான பாதுகாப்பு கொடுக்கனும்னு சொன்னதுக்கு அப்புறம் ஒருத்தன் கரெண்ட்டு கம்பிய வாயில கொடுத்து உடம்புலயும் சுத்திகிட்டு அதும் ஜாமீன் கிடைக்குற நேரம் பார்த்து தற்கொலை பண்ணிகிட்டானு சொன்னா நாம நம்பிட்டு நம்ம வேலைய பாக்க போயிடுறோம், ஏன்னா அவன் நம்ம சாதிக்காரன் இல்ல.
ஒரு குற்றவாளி சிறைச்சாலையில பாதுகாப்பா இருக்கும் போது சாகுறான்னு அதுக்கு நாம அரசாங்கத்த தான்யா திட்டனும், அவங்க மேல தான் கோவபடனும், இதுக்கும் ராம்குமார் மேலயே கோவபடுறானுங்க, ஏன்னா அவன் நம்ம சாதியில்ல
ராம்குமார கடைசி வரை மீடியா முன்னாலயும் பொதுமக்கள் முன்னாலயும் காட்டாத போதே தெரியவில்லையா இதில் நிறைய பேரு சம்பந்தப்பட்றுக்காங்கனு, அதுல நீங்க ஒருத்தன கூட இந்த வழக்குல சேர்க்கலியே, இதுகூட தெரியாம தான்யா நாம இவன் சாகவேண்டியவன் தான்னு சொல்லிட்டு இருக்கோம்.
ஆலடி அருணா கொலை வழக்கு, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, கோகுல்ராஜ் கொலை வழக்கு, தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு இப்படி எந்த வழக்குகளிலும் குற்றவாளி தற்கொலை பண்ணிக்கலியே, இல்ல கொல்லப்படலியே, இல்ல கொல்ல தான் இந்த மக்கள் விடுவாங்களா?
ஒரு வழக்கில் உண்மையான குற்றவாளிய கண்டுபிடிக்குறது ஒன்னும் நம்ம காவல்துறைக்கு பெரிய வேலை கிடையாது. ஆனா அவன் தான் குற்றவாளினு நிரூபிக்க தான் மேலிடத்து ஆணை வேனும். அப்படி ஏதும் பின்புலம் ஒன்னுமில்லாத ஆடு சிக்கிடுச்சினா முன்னாலெல்லாம் கேசுல தூக்கி உள்ள போடுவாங்க, இப்ப கொஞ்சம் முன்னேறி அதாவது அப்டேட் ஆகி சோலியவே முடிச்சிடுறாங்க, ரொம்ப பெருமையா இருக்குல.
அதேபோல ஒரு வழக்குல உண்மை தன்மைய தான் வெளிய கொண்டு வரனுமே தவிர, பொய்ய உண்மையாக்கி அத யாருக்குக்கும் தெரியாமயே மூடி மறைத்து கடைசியில ஆளையும் போட்டு தள்ள கூடாது.
ராம்குமார் இறந்ததுக்கு அப்புறம் கூட இரண்டு நீதிபதிகள் முன்னால போஸ்மார்ட்டம் செய்யனும்னு சொன்னதுக்கு அப்புறம் கூட, அந்த இரண்டு நீதிபதிகளுக்கு கருத்துவேறுபாடு வருதே அப்பவே தெரியலயா இந்த பயல சோலிய முடிச்சிட்டாங்கனு.
ராம்குமார் இறந்து கிட்டதட்ட ரெண்டு வாரம் கழிச்சி தான் போஸ்மார்ட்டம் நடக்கு, இதே நீதித்துறை தான் கபாலி படத்துக்கு டிக்கெட் பிரச்சனையில மறுநாளே தீர்ப்பு சொல்லுச்சி, இதுக்கு அப்புறமும் நாம ராம்குமார திட்டுவோம், ஏன்னா அவன் நம்ம சாதியில்ல.
சுடுகாட்டுக்கு நான் ஏன்டா பனிரெண்டு மணிக்கு போகனும் அப்டிங்குற மாதிரி தான், ராம்குமார் ஜெயில்ல ஏன்டா Dispensary blockக்கு போகனும் அதுவும் உயர் ரக பாதுகாப்போட இருக்குறவன்?
ராம்குமார் தான் குற்றவாளினு ஆதாரத்தோட நிரூபிச்சிட்டு அவன சுட்டு கொன்னா கூட நாப்பது பேரு கரெக்டுனு சொல்லுவாங்க, நாலு பேரு தப்புனு தானேயா சொல்லுவாங்க, நீங்க அத எதையுமே பண்ணாம இப்படி பொட்டணம் போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டீங்களே பாவிகளா.. அதும் உங்க அரசியலுக்கு யாரையோ காப்பாத்த இவன சோலிய முடிச்சிட்டீங்களே.
ராம்குமார் மட்டுமில்ல இன்னும் ஆயிரம் குற்றவாளிகள் ஏன் ஜெயிலுக்கு உள்ள இருக்கோம்னு தெரியாமையே வாழ்க்கையையும், இளமையினையும் தொலைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? ஏன்னா அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம்.
ஸ்வாதிக்கு ஒரு குடும்பம் இருக்குனு கஷ்டப்பட்ட நம்மால, ராம்குமாருக்கும் ஒரு குடும்பம் இருக்குனு நினைக்க முடியல, ஏன்னா அவன் நம்ம சாதியில்ல.
பெங்களூர்காரன் கூட அந்த பெரியவர அடிச்சிட்டு விட்டுட்டான்டா, ஆனா நாம தான் இவன்தான் குற்றவாளினு நிரூபிக்க முடியாம சோலிய முடிக்கிறோம். ஏன்னா ராம்குமார் நம்ம சாதியில்ல..
ஒருத்தன் #மகிழ்ச்சி னு சொன்னதுக்கே போட்டு பொரட்டி எடுத்தது நாம தான நண்பர்களே, அப்புறம் எப்புடி ராம்குமார் பக்கம் நியாயம் இருந்தா பேசுவோமா?
ராம்குமார் என்ன பெரிய தியாகியானு பேசுறுவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன், அடேங்கப்பா அவன் தியாகியெல்லாம் இல்லப்பா சாதாரன மனுசன் தான்டா, அதனால தான் அவன சோலிய முடிச்சிட்டீங்க.
கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
"ஒரு கொலை எப்போது (ஏழை)சாதி பாக்கப்படுதோ அப்பவே உண்மைய மறைக்க ஆயிரம் வழி அரசாங்கத்தால் உருவாக்கப்படும் என்பது அவரவர் சாதியில் ஒருவர் கொலை செய்யப்படும் போது கண்டிப்பாக தெரியும்"
ஆதங்கத்துடன்..
-வள்ளிநாயகம் சுட்கி



No comments:

Post a Comment