உறுதி மொழி
மனிதியாகிய நான்
மானமும் அறிவும் தன்விழிப்பும் கொண்டவளாய் இருப்பேன்.
மனிதியாகிய நான் சக மனிதர்களிடம் சாதி மத வர்க்க பேதம்
பார்க்க மாட்டேன்.
மனிதிகள் அனைவரின் இன்ப துன்பங்களில் பங்கேற்பேன்.
என் படிப்பு,என் வேலை,என் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் தன்னுரிமையை விட்டுத்தராதவளாய் இருப்பேன்.
குடும்பம்,உறவுகள்,நட்புகளால் என் விருப்பங்களும் கருத்துக்களும் ஒடுக்கப்படுவதை எதிர்ப்பேன்.
என்னை பாலியல் பிண்டமாகவும் இரண்டாந்திரக் குடிமகளாகவும் கருதி நடக்கும் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்ப்பேன்
காதலும் இணைத்தேர்வும் மனித உரிமையே.
சாதி மதம் கடந்த திருமணங்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் அது தொடர்பான சாதியக் கொலைகளைத் தடுக்கப் போராடுவேன்.
அண்மைக் காலங்களில் பேராபத்தாய்ப் அதிகரித்துள்ள ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப் பாடுபடுவேன்.
சம உழைப்புக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அனைத்துப் பணிகளிலும் ஆண் கூலி பெண் கூலி என்ற பாகுபாட்டை ஒழிக்கப் பாடுபடுவேன்.
பூமியில் பாதியாக உள்ள மனிதிகளின் நிலம் சொத்து மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவேன்.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும்
சமுதாயத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் 50 விழுக்காடு உரிமை கோரிப் போராடுவேன்.
குழந்தை வளர்ப்பில் ஆணுக்கும் அரசுக்கும் உள்ள கடமையை உணர்த்த் ப் பாடுபடுவேன்
மனிதியாகிய நான் சக மனிதர்களிடம் சாதி மத வர்க்க பேதம்
பார்க்க மாட்டேன்.
மனிதிகள் அனைவரின் இன்ப துன்பங்களில் பங்கேற்பேன்.
மனிதி நான் மௌனம் உடைப்பேன்
மனிதி நான் உரக்கப்பேசுவேன்
மனிதி நான் தட்டிக்கேட்பேன்
மனிதி நான் ஒன்று படுவேன்
மனிதி நான் ஒன்று திரட்டுவேன்
மனிதி நான் தடையுடைப்பேன்
மனிதி நான் விடுதலை அடைவேன்
பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமைகளை நிலைநிறுத்திட போராடுவோம்!
பெண்களை பாதுகாத்தல் என்ற வார்த்தை, அந்தப்பெண்ணுக்கு பின்னே எப்போதும் security போடுவதோ, ஆறு மணிக்கு மேல், வீட்டினுள் அடைத்து பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்பது அல்ல.
ஆணாதிக்கவாதம் பெண்ணை வலுவுள்ளவளாக வளர்க்கவில்லை மனதளவிலும், உடலளவிலும். அதற்கான வாய்ப்பும், ஆணாதிக்க ஒழிப்பும் நிச்சயமானால் பெண்களை யாரும் பாதுகாக்க அவசியமில்லை.
இன்னும் அப்படிப்பட்ட சூழல் நிலவாத பட்சத்தில், பெண்ணை ஒருவர் ஆணாதிக்கவாதத்தால் கொலை செய்ய முற்படும்போதும், ஆசிட் வீச்சின் போதும், இன்னும் அனைத்து விதமான ஆணாதிக்கவாத வன்முறைகளின் போதும், சமூகம் பெண்களை நிச்சயம் பாதுகாக்க முன்வர வேண்டும்.
ஆனால் ஆணாதிக்கவாதம் ஒழிய பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம வளர்ப்பும், சம உரிமையும், அனைத்து விதமான பணிகளிலும் சம வாய்ப்பும், சம பங்கீடும் வேண்டும்.
பெண்களுக்கு equity வழங்கப்பட்டால்தான், equality சாத்தியம்.
- மனிதி
மனிதிகளின் உரிமைப் போரட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள்.
மதிப்பிற்குரிய மனிதிகள்
கல்வியாளர் வெ.வசந்திதேவி
NFIW மாநில செயலாளர் தோழர் பத்மாவதி
சாதிஓழிப்பு போராளி கொளசல்யா
AIDWA மாவட்ட செயலாளர் தோழர் சுகந்தி
பேராசிரியர் தோழர் சரஸ்வதி
புதிய குரல் தோழர் ஓவியா
கவிஞர் சல்மா
திராவிட கழக பிரச்சார
செயலாளர் தோழர் அருள்மொழி
இதழியலாளர் தோழர் ஜுவசுந்தரி
தமிழ்நாடு பெண்கள் இயக்க பொதுச்செயலாளர்
தோழர் மேரி
மதிமுக மகளிர் அணி துணை செயலாளர் மல்லிகா தயாளன்
திருநர் உரிமைப்போராளி
கிரேஸ்பானு
காஞ்சி மக்கள் மன்றம் மகேஸ்
வழக்கறிஞர் அஜிதா
NIFW மாவட்ட செயலாளர் சுசிலா
ஆகியோருக்கு
நன்றிகள் தொடர்ந்து உங்களின் பங்களிப்பை மனிதி க்கு தரவேண்டும் அன்புத் தோழமைகளே



No comments:
Post a Comment